Sunday, May 25, 2008

கண்ணொளி தந்த ஈசர் -4

சுக்கிரருக்கு கண்ணொளி அளித்தல்
வெள்ளீஸ்வரத்தின் வைகாசிப் பெருவிழாவின் எட்டாம் நாள் மாலை சுக்கிராச்சாரியாருக்கு வெள்ளீசர் கண்ணொளி வழங்கிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று மதியம் சுக்கிர பகவானுக்கு திருமுழுக்கு. மாலை திருமயிலை சித்ர குளத்தின் அருகில் மஹாபலியிடம் வாமனனாக எழுந்தருளி பெருமாள் மூன்றடி மண் கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வாமனர், மஹா பலி, சுக்கிராச்சாரியார் ஆகியோரும், ரிஷ்ப வாகனத்தில் பிரதோஷ நாயகராக சிவ பெருமானும், உலகளந்த பெருமாளாக கருட வாகனத்தில் மஹா விஷ்ணுவும், பவளக்க்கால் விமானத்தில் பிரம்மாவும் எழுந்தருளுகிறார் . அங்கு வாமனர் கேட்கும் தானத்தை தடுக்க சுக்கிரச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து கமண்டலத்தில் நீர் வரும் பாதையை அடைத்துக் கொள்ள அதை உணர்ந்த வாமனர் தர்ப்பைப் புல் கொண்டு குத்த சுக்கிராச்சாரியார் கண்ணை இழக்கும் நிகழ்ச்சியும் பின் திரிவிக்ரமனாக உயர்ந்து மூவடியில் ஓரடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து உலகளந்த பெருமாளாக கருட வாகனத்தில் பெருமாள் காட்சி தருகின்றார். பின் கண்ணை இழந்த சுக்கிராச்சாரியருக்கு கோவிலின் அருகில் மும்மூர்த்திகளும் அருட்காட்சி தரும் உற்சவம் நடைபெறுகின்றது. அதற்காக வெள்ளீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். பவனியில் முதலில் விநாயக்ப் பெருமான் முன் செல்ல, பின் ஐயனைப் பார்த்தபடி பல்லக்கில் நால்வர் பெருமக்க்ள், சேக்கிழார், ஒட்டக் கூத்தர் எழுந்தருளிகின்றனர், பின்னர் பிரம்மாவும், வாமனர், சுக்கிராச்சாரியார், மஹாபலி ஆகியோர் ஒரு விமானத்திலும் பொழிலளந்த புள்ளூர்தி செல்வனாக உலகளந்த பெருமாளும் , பஞ்ச மூர்த்திகளும் மாட வீதிவலம் வருகின்றனர். ஒரு குட்டி அறுபத்து மூவர் திருவிழா போல சிறப்பாக ந்டைபெறுகின்றது சுக்கிராச்சாரியாருக்கு ஈசர் கண்ணொளி வழங்கிய விழா. இடையில் கபாலீச்சுரம் சென்று கபாலீசரின் பிரதோஷ நடனத்தையும் தரிசித்து வரவும் முடியும். சமயம் கிடைக்கும் போது வெள்ளீஸ்வரம் சென்று கண்ணொளி தந்த ஈசரையும், காமாக்ஷி அம்மனையும் சரபேஸ்வரரையும் தரிசன்ம் செய்து அருள் பெறுங்கள்.


மஹாபலி, சுக்கிரர், வாமனர்


பிரம்மன்


பிரதோஷ நாயகராக சிவபெருமான்


பொழிலளந்த புள்ளூர்தி செல்வராக உலகந்த பெருமாள்






வெள்ளீசர் விமான சேவை


காமாக்ஷி அம்பாள் விமான சேவை



எழில் குமரன் விமான சேவை



சைவ சமய குரவர்கள் நால்வர்

இத்துடன் திருமயிலை வெள்ளீஸ்வரத்தின் பதிவுகள் நிறைவு பெறுகின்றன.

6 Comments:

Blogger Boston Bala said...

நன்றி

May 25, 2008 at 6:53 AM  
Blogger S.Muruganandam said...

நன்றி பாஸ்டன் பாலா அவர்களே.

May 26, 2008 at 3:59 AM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

கடந்த ஒரு அரைமணிநேரமாக தங்களது பல பதிவுகளைக் கண்டு மகிழ்ந்தேன். இணையத்தில் ஆன்மிகம் வளர்வது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

பதிவிற்கு நன்றி.

July 19, 2008 at 10:19 PM  
Blogger S.Muruganandam said...

நன்றி பாரதீய நவீன இளவரசன் அவர்களே. வரும் நாட்களிலும் வந்து தரிசனம் பெறுங்கள்.

July 20, 2008 at 12:49 AM  
Blogger Expatguru said...

புகைப்படங்களும் எளிய தமிழில் அருமையான வர்ணனைகளும் பிரமாதம். இறைவனை நேரில் தரிசித்தது போல இருந்தது.

July 20, 2008 at 2:11 AM  
Blogger S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல். அவன் காட்ட அடியேன் அதை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

மிக்க நன்றி expatguru அவர்களே.

July 20, 2008 at 8:38 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home