Sunday, May 11, 2008

கண்ணொளி தந்த ஈசர் -2

வெள்ளீஸ்வரம் திருக்கோவில் மூஷிக வாகனத்தில் செல்வ விநாயகர்

எல்லாம் வல்ல சிவபரம்பொருள் தன்னை மெய்யன்பர்கள் வழிபாடு செய்து உய்யும் பொருட்டு திருக்கோயில் கொண்டெழுந்தருளிய தெய்வத் திருத்தலங்களில் சிறந்ததும், திருத்தொண்டை நாட்டுத்தலங்களில் ஒன்றாகியதும், தெய்வத்திருவள்ளுவர் தோன்றியதும், கண்ணிழ்ந்த சுக்கிரன் திருமயிலை வந்து மீண்டும் கண் ஒளி பெற ஈசுவரனை வழிபட்ட குருந்தவனம் என்னும் வெள்ளீஸ்வரத்தின் கோவில் அமைப்பைப் பற்றி பர்ப்போம்.
திருமயிலை கபாலீஸ்ஸரத்தின் தேற்கு மாட வீதியில், தெற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜ கோபுரம். இறைவனின் ஸ்தூல சரீரமாக கருதப்படுவதும் கோடி புண்ணியம் கோபுர தர்சனம் க்ண்டு உள்ளே நுழைந்தால் எதிரே முழு முதற் கடவுள் கணபதி சன்னதி. சன்னதியில் ஒரு வித்தியாசம் கண்ணில் படுகின்றது, இரண்டு வினாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, செல்வ விநாயகர் தனியாக அமர்ந்த கோலத்திலும், சித்தி புத்திகளுடன் நின்ற கோலத்திலும் இரு விதமாக பிரதிஷ்டை செய்யப்ப்ட்டுள்ளார் முழு முதற் கடவுள் கணபதி. வழக்கமாக கிழக்கு நோக்கியபடி இல்லாமல் தெற்கு நோக்கி உள்ளார் விநாயகர் இத்தலத்தில். த்லையில் கொட்டிக்கொண்டு தோப்புக்க்ரணமிட்டு விகனங்களையெல்லாம் தீர்க்கும் வினாயகர்களை வணங்கி விட்டு அடுத்து ஐயன் சன்னதிக்கு செல்வோம்.

வெள்ளீஸ்வரர் அதிகார நந்தி சேவை


ஐயன் ச்ன்னதியின் முன்னர் துவார பாலகர்கள். அவர்களிடம் அனுமதி பெற்று ஐயனை வணங்குகின்றோம் கிழக்கு நோக்கி திருமுக மண்டலத்துடன் லிங்க ரூபத்தில் அருட்காட்சி கொடுக்கின்றார், சுக்கிராச்சாரியாருக்கு மீண்டும் கண்ணொளி வழங்கிய கருணைக் கடல் ஐந்தலையரவு அரைக்கசைத்த பொன்னார் மேனியர் சிவ பெருமான். ஐயன் முன் நிற்கும் பொது உள்ளம் உவகையால் பொங்குகின்றது. தூய பக்தியொன்றை மட்டுமே பார்த்து அருள் பாலிக்கும் அந்த வேயுறு தோளி பங்கரின் கருணை அப்படியே நம்மை நெகிழ வைக்கின்றது. வாயாற தேவார திருவாசக பதிகாங்கள் பாடி ஈசா, அடியார் நேசா அனைவறையும் காப்பாற்றி ரக்ஷி என்று தெண்டனிட்டு வணங்கி வாருங்கள் பிரகார வலம் வருவோம். சென்னையில் அமைந்துள்ள கோவில் என்பதால் ஒரே ஒரு பிரகாரம். தெற்கு பிரகாரத்தில் நால்வர் பெருமக்கள், பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, வாராகி, ஆகிய சப்த மாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அந்த சக்திகளை வணங்கி வலப்புறம் திரும்பினால் வீரபத்ரர், நாகர், உண்ணாமுலையம்மன், அண்ணாமலையார், சரஸ்வதி, லக்ஷ்மி, மற்றும் சுக்கிராச்சாரியாரின் கண்ணைத் துரும்பால் கிளறிய உலகளந்த பெருமாள், அவர்களை வணங்கி விட்டு திரும்பினால் முருகர் சன்னதி.
கந்தருவி வாகனத்தில் காமாக்ஷி அம்பாள்


தன் தேவியர் இருவருடன் வேல் ஏந்தி அருட்கோலம் காட்டுகின்றார் முத்துகுமார சுவாமி. . அழகன் முருகனின் சன்ன்தியின் எதிரே புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தங்கக் கொடி மரம் அப்படியே மின்னுகின்றது. எழில் குமரனின் சன்னதிக்கு வலப்புறம் பஞ்ச மூர்த்ஹ்திகள் உற்சவர்களாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர், பெருவிழாக்காலங்களில் வீதி உலா வ்ந்து அருள் புரியும் உற்சவ திருமூர்த்த்களை தரிசித்த பின் அம்மன் ச்ன்னதி செல்வத்ற்கு முன் ஐயன் கருவறையில் உள்ள கோஷ்டங்களில் தெற்கு நோக்கி விநாயகரும், தக்ஷிணா மூர்த்தியும், மேற்கு நோக்கி லிங்கோத்பவரும், வடக்கு நோக்கி பிரம்மாவும், துர்க்கையும் அமைந்துள்ள எழிலையும், கோஷ்டங்களில் ம்னித முகங்கள் அமைக்கப்படுள்ள பாங்கையும் கண்டு களிக்கலாம்.


கந்தருவன் வாகனத்தில் முருகர்


அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மந்த்காச புன்னகையுடன், லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய இருவரையும் கண்களாகக் கொண்ட அம்பாள் கருணையுடன் நம்மை நோக்கி, அங்குசம், பாசம், அபய, வரத கரங்களுடன் நின்ற காலத்தில் எழிலாக அருட்காட்சி தருகின்றாள் காமாக்ஷி அம்பாள். காஞ்சி காம கோடி கருணா விலாசினி இங்கே சென்னையில் நமக்காக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். ஜகன்மாதா, அன்னபூரணி, ஜகத் ஜனனி அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கி வலம் வந்தால் மற்ற உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம், ஆடல் வல்லானின் பனித்த சடையில் சந்திரப்பிறை அழகு என்றால், சுந்தர பிக்ஷ்டாணர் மூர்த்த்தில் மான் அழகு பின்னம் கால்களில் நின்று முன்னங்கால்களை மடக்கி நின்ற கோலத்தில், முனி பத்தினிகள் பார்த்து மயங்கிய அந்த சுந்தர வதனத்தை தரிசிக்கும் வகையாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளந்த பெருமாள், வாமனர், ஆறுமுகர், நால்வர் பெருமக்கள், சுக்கிராச்சாரியார், மஹாபலி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் ஆகியோரின் மூர்த்தங்களும் உள்ளன. அடுத்து தெற்கு நோக்கிய அம்பலம் அதில் ஆனந்த நதம் புரியும் அம்பல வாணர் அருட்காட்சி அம்மை சிவகாமியும் உடன் அருள் பாலிக்க்கின்றாள்.
மஹா திரிபுர சுந்தரி


காமாக்ஷி அம்பாள்


பின் வெளியே வந்தால் சுக்கிரேஸ்வரர் மற்றும் சரபேஸ்வரர் சன்னதி. சுக்கிரேஸ்வரர் சன்னதியில் இத்தல ஐதீகமான குருந்த மரத்தடியில் சுக்கிராச்சாரியார் சிவ பூஜை செய்யும் கோலத்தை காணலாம் . சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சரபேஸ்வரின் சன்னதியில் ராகு காலங்களில் பக்தர்கள் குவிகின்றனர். சரபர் மனிதன், யாளி,பக்ஷி மூன்றும் கலந்த உருவம். பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் இரணியனை வதம் செய்த பின்னரும் உக்ரம் அடங்காமல் சுற்றி வந்ததால் அவரது உக்ரத்தை அடக்கி சாந்தப்படுத்த சிவபெருமான் எடுத்த உருவமே சரபேஸ்வரர். சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று கண்களும், நகங்கள் வஜ்ராயுதம் போலவும், வடவாமுகாக்னி, பைரவை இவர்களை தன் வயிற்றில் ஜடாக்னியாக அடக்கி, மான், மழு, பாம்பு, அக்னி, திருக்கரங்களில் தாங்கி, யாளி முகத்துடனும். பிரத்தியங்கிரா, சூலினி துர்க்கை ஆகியோரை இறக்கைகளாகக் கொண்டு, ரோக தேவதைகளையும், யமனையும் தொடைகளாகக் கொண்டு, சிரசில் பிறை, கங்கை விளங்க எட்டுக்கால்கள், நான்கு கைகள், கருடனைப்போன்ற அலகு, சிங்க வால், தெற்றுப்பல, காலில் நரசிம்மரை சாந்திப்படுத்தும் கோலத்துடன் கம்பீரமாக கற்பனையிலும் நினைக்க முடியாத உருவுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் சரபேஸ்வரர். தடைகள் மன்க்கலக்கம். வியாதிகள் ஆகியவற்றை களைந்து எதிர்களே இல்லாத அருளைத்தரும் சத்ரு நாசகர் ஸ்ரீ சரபேஸ்வ்ரர். இராகு காலத்தில் இவரை வழிபட்டால் ஏவல். பில்லி, சூனியம், தீராத ம்னோ வியாதி, தேவை இல்லாத பயம் தீராத நோய்கள். வறுமை, நம்மை ஆட்டிப்படைக்கும் கண்ணிற்கு தெரியாத துஷ்ட தீய சக்திகள் போன்றவைகள் நீங்கும்.பேதமற்ற மூர்த்தியான இவரை வணங்குவதால் இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்கள் (புயல், இடி, மின்னல்) பாதிக்காது. ஞாயிற்றுக்க்கிழமைகளில் இராகு காலத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன இவருக்கு.திருத்தேரில் வெள்ளீஸ்வரர்

அடுத்து கொடிமரம் மற்றும் பலி பீடம், கொடிமரத்திற்கு வலப்புறம் கொடியேற்று மண்டபம். இங்கு அலங்கார மண்டபம் மற்றும் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.வெண் விடையில் சண்டிகேஸ்வரர்

அடுத்த பதிவில் வைகாசி பெருவிழாவைப் பற்றி காண்போம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home