பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்சவம்
KAPALEESWARAR ON SAUDAL VIMANAM (Closeup)
திருவான்மியூர் மருந்தீசர் ரிஷப வாகன சேவை
நாளைய உற்சவம்:(ஆறாம் நாள்)
திருமயிலை:
காலை : பஞ்ச மூர்த்திகள் பல்லக்கு விழா.
மாலை: பஞ்ச மூர்த்திகள் யானை வாகனம்
திருவான்மியூர்:
காலை: அருள்மிகு சந்திரசேகரர் இரட்சசுவிற்க்கு அருளல்.
மாலை: அருள்மிகு சந்திர சேகரர் தொட்டி விழா.
இரவு: அருள்மிகு தியாகராஜர் 6ம் திருபவனி இந்திரனுக்கு அருளல்.
வேங்கீஸ்வரம்:
காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி
மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, யானை வாகனம்.
திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
மைபூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைபூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
கண்ணாரும் நுதலாய் கதிர்சூழ்ஒளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீறு அணிவாய்எழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மியூர் உறையும்
அண்ணா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
*********
4 Comments:
நன்றி
கற்பகாம்பாளுக்கும், கபாலீஸ்வரருக்கும்.
அருமையான படங்கள்.
நன்றி.
வாருங்கள் குருநாதரே. தாங்கள் தான் Unicode பற்றி எனக்கு விளக்கினீர்கள். நான் blog செய்ய ஆரம்பித்தது அதற்கு தாங்களே வந்து பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றி.
மேலும் வளர வாழ்த்துங்கள். மிகவும் நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home