பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஒன்பதாம் நாள் உற்சவம்
கிளிகளும், பட்டாம் பூச்சிகளும், மைனாக்களும் எம்பெருமானின்
மேல் கொஞ்சி விளையாடும் அழகே அழகு.
திரிபுரசுந்தரி அம்பாள்
பிரம்மன், விஷ்ணுவுடன் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணக் கோலத்தில் பவனி
வேங்கீஸ்வரரின் அருட்கோலங்கள்
திருமயிலை:
அதிகாலை : திரு கூத்தப்பெருமான் திருக்காட்சி.
மதியம்: பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரி
மாலை : புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல்.
இரவு: அம்மையப்பர் திருக்கல்யாணம். கயிலாய ஊர்தி, கொடியிறக்கம், சண்டேஸ்வரர் விழா நிறைவு.
திருவான்மியூர்:
காலை : அருள்மிகு சந்திரசேகரர் கடல் நீராடல்.
இரவு: அருள்மிகு திரிபுர சுந்தரிதியாகராஜர் திருக்கலயாணம். கொடியிறக்கம் வான்மீகி முனிவருக்கு 18 திருநடனம் காட்சியருளி வீடு பேறு அளித்தல் - பெருஞ்சிறப்பு விழா.
வேங்கீஸ்வரம்:
அதிகாலை: ஸ்ரீ நடராஜர் பவனி.
காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி. தீர்த்தவாரி.
இரவு : ஸ்ரீ அழகம் பெருமாள் பவனி - வேங்கீஸ்வரம் எழுந்தருளல்.
திருக்கல்யாண உற்சவம்.
கைலாய பருவதம். பஞ்ச மூர்த்திகள் வாகனங்களில் பவனி . சிறப்பு வாண வேடிக்கை, கரகாட்டம்.
திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
நற்றா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்கள் ஏத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்
திண்தேர் வீதியதார் திருவான்மி யூர்உறையும்
அண்டா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
*******
1 Comments:
Thank you very much for your encouraging words. In the next post i will give a link
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home