பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஏழாம் நாள் உற்சவம்
Karpagambal Chariot
Kapaleeswarar chariot (Side view)
கபாலீஸ்வரர் திருத்தேர்( பக்கவாட்டு தோற்றம்)
திருவான்மியூர் சந்திரசேகரர் திருத்தேரில்
திருவான்மியூர் திருத்தேர்
வேங்கீஸ்வரம் பஞ்ச மூர்த்திகள்
திருத்தேரோட்டம்(2007)
வேங்கீஸ்வரர் திருத்தேர்
சாந்த நாயகி அம்பாள்
அம்பாள் இரதம்
முருகர்
முருகர் இரதம்
சண்டிகேஸ்வரர்
சண்டிகேஸ்வரர் இரதம்
2004
சாந்த நாயகி அம்பாள்
முருகர்
வேங்கீஸ்வரர் தேர்
நாளைய உற்சவம்:(எட்டாம் நாள்)
திருமயிலை:
காலை : திருமயிலையில் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதம்.
பங்குனி யுத்திர நாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!
என்று அழைத்து "என்பை பூம்பாவையாக்கி" அருளல் உற்சவம் குளக்கரையில்.
மாலை: மயிலையின் சிறப்பு , "அறுபத்து மூவர் பெருவிழா." வெள்ளி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு அருட்காட்சி.
திருவான்மியூர்:
காலை: அருள்மிகு சந்திரசேகரர் நான் மறைகளுக்கு அருளல்.
மாலை: அருள்மிகு சந்திர சேகரர் பரி வேட்டை விழா.
இரவு: அருள்மிகு தியாகராஜர் 8ம் திருபவனி.
வேங்கீஸ்வரம்:
காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி.
மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் பவனி ( குதிரை வாகனம்).
திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
மலிவிழாவீதி மட நல்லார் மாமயிலையாக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திர நாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்
கானார் ஆனையின்தோல் உரித்தாய் கறைமாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மியூர் உறையும்
ஆனாய் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
*******
2 Comments:
காணக்கண் ஆயிரம் போதாது. கற்பகாம்பாள் திருவுருவப்படம் அருமையிலும் அருமை. மிக்க நன்றி.
வரும் நாடகளிலும் வந்து தரிசனம் செய்யுங்கள் expat guru அவர்களே.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home