பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - நான்காம் நாள் உற்சவம்
வியாக்ர பாதர் வழிபட்ட வேங்கீஸ்வரர்
வேங்கீஸ்வரர் நாக வாகன சேவைக்கு
முருகர்
வடபழனி வெள்ளி நாக வாகனம்
நாளைய உற்சவம்:(ஐந்தாம் நாள்)
திருமயிலை:
காலை :
பஞ்ச மூர்த்திகள் சவுடல் விமானம்.
நள்ளிரவு : வெள் விடைப் பெருவிழா
விநாயகர் : வெள்ளி மூஷிக வாகனம்.
கபாலீஸ்வரர்: வெள்ளி ரிஷப வாகனம்.
கற்பகாம்பாள் : தங்க ரிஷப வாகனம்.
சிங்கார வேலவர்: வெள்ளி மயில் வாகனம்.
சண்டிகேஸ்வரர் : வெள்ளி ரிஷப வாகனம்.
திருவான்மியூர்:
காலை: அருள்மிகு சந்திரசேகரர் தொட்டி விழா யமனுக்கு அருளல்.
மாலை: அருள்மிகு சந்திர சேகரர் விடையூர்தி காட்சி, ரிஷப வாகனத்தில் திருக்காட்சியருளல். பஞ்ச மூர்த்திகள் வீதி உலா.
இரவு: அருள்மிகு தியாகராஜர் 5ம் திருபவனி இராமருக்கு அருளல்.
வேங்கீஸ்வரம்:
காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி
மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, ரிஷப வாகனம்.
திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
ஊர்திரை வேலை யுலாவும் உயர் மாமயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
பொன்போ லுஞ்சடைமேல் புனல் தங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெல்லாம் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
*********
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home