Tuesday, March 11, 2008

பங்குனிப்பெருவிழாக் காட்சிகள் - முதல் நாள் உற்சவம்

திருமயிலையில் ஒரு சிறப்பு காலை மாலை இரு வேளைகளிலும் எழிலார் மாட வீதிகளில் "காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாபநாசம் சிவம் அவர்கள் பாடிப் பரவிய திருவீதி உலா வருபவர்கள் பஞ்ச மூர்த்திகள். விநாயகரும், சோமாஸ்கந்தராக கபாலீஸ்வரரும், கற்பகவல்லியும், வள்ளி, தேவசேனா சமேத சிங்கார வேலவரும், சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா வருகின்றனர் இரு வேளையும். மேலும் காலையும் மாலையும் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் மற்றும் சிங்கார வேலவர் தனி வாகனங்களில் தரிசனம் தருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.







திருவான்மியூர் தொண்டை மண்டலத்து தியாகத் தலங்களுள் ஒன்று. எனவே காலையும் மாலையும் பஞ்ச மூர்த்திகளாக திருவீதி வலம் வருபவர் சந்திர சேகரரே, அம்மை திரிபுரசுந்தரி தனியாக வலம் வருவது இல்லை. இரவு தியாகராஜ யந்திரத்தில் தியாக ராஜ சுவாமியும், அம்மை தனி மஞ்சத்திலும் வலம் வருகின்றனர்.







வேங்கீஸ்வரத்தில் காலை சந்திரசேகரர் மட்டும் மற்றும் மாலைகளில் பஞ்ச மூர்த்திகளும் வலம் வருகின்றனர். இத்திருக்கோவிலில் முதலில் கோவிலை சுற்றி உள் சுற்று வலமும், அதற்குப்பின் மாட வீதியில் வெளி சுற்றுமாக வலம் வருவது சிறப்பு.


இனி முதல் நாள் காட்சிகள்.

காலை கொடியேற்றத்திற்க்கு பின் கபாலீஸ்வரர் பவளக்கால் விமான சேவை.


காலை கொடியேற்றத்திற்க்குப்பின் வேங்கீஸ்வரர் சேவை


இரவு வேங்கீஸ்வரர் சேவை



வடபழனி சாந்தநாயகி அம்பாள்


மூன்று திருக்கோவில்களையும் ஒரே சமயத்தில் சென்று தரிசிப்பது சிரமமானதால் முடிந்தவரையே தரிசனம் கிடைத்தது எனவே முழு தரிசனமும் தர இயலவில்லை.



நாளைய உற்சவம்:(இரண்டாம் நாள்)


திருமயிலை:


காலை : சூரிய வட்டம்.


மாலை : கபாலீஸ்வரர் சந்திர வட்டம், கற்பகாம்பாள் கிளி வாகனம், சிங்கார வேலவர் கிளி வாகனம்.


திருவான்மியூர்:


காலை: அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிறையில் காமதேனுவிற்கு திருகாட்சியருளல்.


மாலை: அருள்மிகு சந்திர சேகரர் சந்திரப்பிறையில் காட்சியருளல்.


இரவு: அருள்மிகு தியாகராஜர் வீதியுலா.


வேங்கீஸ்வரம்:


காலை : ஸ்ரீ சந்திரசேகரர் சூரிய பிரபை சேவை.


மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, சந்திரப்பிரபை.




திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது

மட்டிட்ட புன்னயங்கானல் மடமயிலை
கட்டிடங் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு
அட்டிடல் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமைநங்கையொர் பங்குடையாய்
திரையார் தென்கடல்சூழ் திருவான்மி யூர்உறையும்
அரையா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home