பங்குனிப்பெருவிழாக் காட்சிகள்
பங்குனி உத்திரம் "கல்யாண விரதம்" என்று சிவ பெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஆகவே அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை, திருஞானசம்பந்தர் என்பை பெண்ணாக்கிய கயிலையே மயிலை என்னும் திருமயிலையில் இப்பங்குனிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இப்பெருவிழாவின் முக்கிய உற்சவம் எட்டாம் நாள் மாலை நடைபெறும் "அறுபத்து மூவர் திருவிழா ". பங்குனி பௌர்ணமியன்று அம்மையப்பர் திருக்கல்யாணம்.
மலிவிழா வீதி மட நல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திர நாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!
என்று சிறப்பிக்கப் பட்ட பங்குனித்திருவிழாவின் காட்சிகளை அடுத்த பத்து நாட்கள் வந்து தரிசித்து விட்டு செல்லுங்கள்.
உடன் திருவான்மியூர் மருந்தீசர், மற்றும் வடபழனி வேங்கீஸ்வரர் திருவிழா காட்சிகளையும் தரிசியுங்கள். முடிந்தவரை எழுத்தைக் குறைத்து படங்களாக தர முயற்சி செய்கிறேன்.
சென்னையில் உள்ள அன்பர்கள் தரிசிக்க ஏதுவாக முதல் நாளே அடுத்த நாள் நிகழ்ச்சிகளை தர எண்ணியுள்ளேன்.
வருக! அருள் தரிசனம் பெருக!
திருமயிலை
இன்று ( 11-03-08) காலை கிராம தேவதை வழிபாடு, அருள்மிகு கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு.
இரவு: மிருத்சங்கிரகனம் என்னும் மண் சேகரித்தல், அங்குரார்ப்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல். பின் விநாயகர் உற்சவம். அருள்மிகு விநாயகர் வெள்ளி மூஷிக வாகன சேவை.
திருவான்மியூர்:
நேற்று இரவு அருள்மிகு செல்லியம்மன் திருவீதியுலா
இன்று இரவு அருள்மிகு விநாயகர் திருவீதியுலா.
வேங்கீஸ்வரம்:
இன்று இரவு : மண் சேகரித்தல், முளைப்பலைகை இடுதல், வாஸ்து சாந்தி என்னும் ஆலயம் சுத்திகரித்தல்.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமான் வீதியுலா.
ஸ்ரீ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா.
நாளைய உற்சவம்
திருமயிலை:
காலை: கொடியேற்று மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். கொடியேற்றம், பஞ்ச மூர்த்திகள் திருவிதியுலா.
இரவு: கற்பகாம்பாள் மயில் வடிவில் புன்னை மரத்தடியில் சிவ பூசை செய்யும் காட்சி. கபாலீஸ்வரர் கற்பக மர வாகன, சிங்கார வேலவர் வேங்கை மர சேவை.
திருவான்மீயூர்:
இரவு : கொடியேற்றம், யாக சாலை பூஜை, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா.
வேங்கீஸ்வரம்:
காலை: கொடியேற்றம். பஞ்ச மூர்த்திகள் வீதியுலா.
இரவு: ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் பவனி , பர்வத விமானம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home