பங்குனிப்பெருவிழாக் காட்சிகள் - இரண்டாம் நாள் உற்சவம்
சந்திரப்பிரபையில் வேங்கீஸ்வரர்
நாளைய உற்சவம்:(மூன்றாம் நாள்)
திருமயிலை:
காலை : காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபநாசம் சிவன் பாடிப் பரவிய அதிகார நந்தி சேவை அதிகாலை .
கபாலீஸ்வரர் : வெள்ளி அதிகார நந்தி வாகனம்.
கற்பகாம்பாள் : கந்தருவி வாகனம்.
சிங்கார வேலவர்: கந்தருவன் வாகனம்.
விநாயகர் : வெள்ளி மூஷிக வாகனம்.
சண்டிகேஸ்வரர் : வெள்ளி சின்ன ரிஷப வாகனம்.
8:30 மணியளவில் குளக்கரையில் திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் திருவிழா.
மாலை : கபாலீஸ்வரர் பூத வாகனம், கற்பகாம்பாள் பூதகி வாகனம், சிங்கார வேலவர் தாராகாசுரன் வாகனம்.
திருவான்மியூர்:
காலை: அருள்மிகு சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு திருகாட்சியருளல்.
மாலை: அருள்மிகு சந்திர சேகரர் சந்திரனுக்கு காட்சியருளல்.
இரவு: அருள்மிகு தியாகராஜர் 3ம் திருபவனி பார்த்தசாரதிக்கு அருளல்.
வேங்கீஸ்வரம்:
காலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் அதிகார நந்தி சேவை
மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, பூத வாகனம்.
திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
மைபயந்த ஒண்கண் மடநல்லார்மாமயிலைக்
கைபயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய் கொடியார் மாமதியோடு அரவம்மலர்க் கொன்றையினாய் செடியார் மாதவிசூழ் திருவான்மி யூர்உறையும்
அடிகேள் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
2 Comments:
நன்றி கைலாஷி சார்.
அவ்ர் ஆட்டுவிக்கின்றார். வரும் நாட்களிலும் வந்து தரிசனம் செய்யுங்கள் மதுரையம்பதி ஐயா அவர்களே.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home