Sunday, March 23, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் நிறைவு

இந்த பதிவுடன் பங்குனிப்ப்பெருவிழாப் பதிவுகள் நிறைவடைகின்றது. அடுதது சித்திரைப் பெருவிழா காட்சிகளுடன் சந்திக்கின்றேன், வந்து தரிசித்த்வர்களுக்கு நன்றி.அடியேனை Blogக்கிற்கு அறிமுகம் செய்து Unicode, தேன் கூடு ஆகியவற்றுக்கு அறிமுகம் செய்த திரு சிவமுருகன் வந்து இந்த தொடரில் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கின்றார். அவருக்கு நன்றி.

வேங்கீஸ்வரம் புஷ்ப பல்லக்குவேங்கீஸ்வரர்
சாந்த நாயகி அம்பாள்

புஷ்ப பல்லக்கில் அம்மையப்பர்

திருமயிலாப்பூர் பதிகம் கடைகாப்பு

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்

ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வல்லார்

வானசம் பந்தவத் தவரோடும் வாழ்வாரே.

திருசிற்றம்பலம்

Tuesday, March 18, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - பத்தாம் நாள் உற்சவம்

கல்யாண விரத நாளான "பங்குனி உத்திர" நன்னாளான இன்று அதிகாலை நடராஜர் தரிசனம். பின் மஹா அபிஷேகம், உச்சிக் காலம் தீர்த்தவாரி, அம்மையப்பர் திருக்கல்யாணம், கைலாய பர்வத வாகன திருவீதி உலா, கொடியிறக்கம் என்று அடுத்த நாள் அதிகாலை வரை உற்சவம்தான்.
ஆனந்த நடராசர் தரிசனம்


மீனாக்ஷி திருக்கல்யாணம்வேங்கீஸ்வரம் திருக்கல்யாணம்
விநாயகப் பெருமான்
சாந்த நாயகி அம்பாள்


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவித அலங்காரம் பஞ்ச மூர்த்திகளுக்கு.


வேங்கீஸ்வரர் திருக்கல்யாணக் கோலம்
கனிப் பந்தலில் அம்மையபப்ர் திருக்கல்யாணம்


எத்தனை அழகு எம் சுந்தரேஸ்வரர்திருக்கல்யாணம் முடிந்த பின்
கைலாய வாகன சேவை


முருகர்
தங்கையை கன்னிகாதானம் செய்துதரவந்த அழகம்பெருமாள்


சண்டிகேஸ்வரர்


நாளைய உற்சவம்:(பதினொன்றாம் நாள்)

திருமயிலை:காலை : உமா மகேஸ்வரர் காட்சி.
இரவு. பந்தம் பறி விழா.திருவான்மியூர்:
மாலை: அருள்மிகு சந்திர சேகரர் தெப்ப விழா.இரவு: வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா.
அதிகாலை: அருள்மிகு தியாகராஜர் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மனுக்கு அருளல் பந்தம்பரி 18 திருநடன - பெருஞ்சிறப்பு விழா
வேங்கீஸ்வரம்:
காலை : துவஜாவரோகணம் (கொடியிறக்கம்).

மாலை : புஷ்பப் பல்லக்கு பவனி .திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்இருஞ் சாக்கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
நன்றான னபுகழால் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மியூரதன்மேல்
குன்றாது ஏத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.
*******


one fan of this blog is
http://home-theater-brasil.blogspot.com.


பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஒன்பதாம் நாள் உற்சவம்

தொண்டை மண்டலத்து தியாகத்தலம் திருவான்மியூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் இருந்தாடும் அழகர்


தியாகராஜப் பெருமான்.
கிளிகளும், பட்டாம் பூச்சிகளும், மைனாக்களும் எம்பெருமானின்


மேல் கொஞ்சி விளையாடும் அழகே அழகு.திரிபுரசுந்தரி அம்பாள்


கல்யாண சுந்தரர் திருக்கல்யாணத்த்திற்க்குப்


பின் விமான காட்சிபிரம்மன், விஷ்ணுவுடன் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணக் கோலத்தில் பவனி


வேங்கீஸ்வரரின் அருட்கோலங்கள்


ஒன்பதாம் நாள் உற்சவம்


இரவு புறப்பாடு


நாளைய உற்சவம்:(பத்தாம் நாள்)


பங்குனி உத்திர நன்னாள்


திருமயிலை:அதிகாலை : திரு கூத்தப்பெருமான் திருக்காட்சி.
மதியம்: பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரிமாலை : புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல்.
இரவு: அம்மையப்பர் திருக்கல்யாணம். கயிலாய ஊர்தி, கொடியிறக்கம், சண்டேஸ்வரர் விழா நிறைவு.
திருவான்மியூர்:
காலை : அருள்மிகு சந்திரசேகரர் கடல் நீராடல்.
இரவு: அருள்மிகு திரிபுர சுந்தரிதியாகராஜர் திருக்கலயாணம். கொடியிறக்கம் வான்மீகி முனிவருக்கு 18 திருநடனம் காட்சியருளி வீடு பேறு அளித்தல் - பெருஞ்சிறப்பு விழா.
வேங்கீஸ்வரம்:
அதிகாலை: ஸ்ரீ நடராஜர் பவனி.
காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி. தீர்த்தவாரி.

இரவு : ஸ்ரீ அழகம் பெருமாள் பவனி - வேங்கீஸ்வரம் எழுந்தருளல்.
திருக்கல்யாண உற்சவம்.
கைலாய பருவதம். பஞ்ச மூர்த்திகள் வாகனங்களில் பவனி . சிறப்பு வாண வேடிக்கை, கரகாட்டம்.


திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
நற்றா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்கற்றார்கள் ஏத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்றிவர்கள்கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்திண்தேர் வீதியதார் திருவான்மி யூர்உறையும்அண்டா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.*******


Monday, March 17, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - எட்டாம் நாள் உற்சவம்

அறுபத்து மூவர் திருவிழா

பங்குனிப் பெரு விழாவின் எட்டாம் நாள் மாலை பிரதோஷ காலத்தில் பஞ்ச மூர்த்திகள் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு அருட்காட்சி தருகின்றனர். பங்குனிப் பெரு விழாவின் சிகரமான இந்த "அறுபத்து மூவர் திருவிழாவின் " அற்புத காட்சிகள்.

"அரவம் தீண்டி மாண்டு என்பான பூம்பாவையை அம்மையின் ஞானப் பாலுண்ட ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் ஆண்டவன் மேல் பதிகம் பாடி உயிருடன் எழுப்பிய நிகழ்ச்சி காலையில் குளக்கரையில் நடைபெறுகின்றது.


அந்த அற்புதத்தை போற்றும் வகையில் மாலை பூம்பாவை, சிவநேச செட்டியார், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலியோர் பல்லக்கிலும், மற்ற நாயன்மார்கள் நால்வர் நால்வராக பவளக் கால் விமானத்திலும் பஞ்ச மூர்த்திகளை எதிர் கொண்டு , வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும், கற்பகாம்பாள், சிங்கார வேலவர், சண்டிகேஸ்வரர் மற்ற விமானங்களில் பவனி வர, மயிலையின் மற்ற தெய்வங்களான அங்காள பரமேஸ்வரி, திரௌபதி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன், திருவள்ளுவர் வாசுகியுடன், சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து முத்துக்குமரன் என்று மாடவீதிகள் முழுவதும் மக்கள் வெள்ளமாக கூட்டம் கூடியிருக்க, அன்பர்கள் தண்ணீர்,நீர் மோர், பிரசாதம் என்று வழங்க எம்பெருமான் பவனி வரும் அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. முடிந்த வரை புகைப்படங்களின் மூலம் அந்த அற்புத அழகைக் கண்டு களியுங்கள்.

One of the legends of this great temple is the miracle done by ThirugnanaSambandar who turned ashes into a lady by singing in praise of Lord Shiva at Kapaleeswaram. To commemerate this every year this festival is celebrated. You are witnessinf that great festival in this post.


THE ARUPATHU MOOVAR FESTIVAL OF MYLAPORE


8th day evening of 10 day festival


Kola Vizhi Amman


மயிலையிலே கோவில் கொண்ட


கோல விழி அம்மன்


Thraupathy Amman

திரௌபதி அம்மன்


Chinthathripet Murugar

சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து மயிலை வந்த

முத்துக்குமரன்

Thiruvalluvar with Vasuki

உலகப் பொது மறை திருக்குறள் அருளியதிருவள்ளுவரும் வாசுகியும்
Singaravelavar in Vimanam giving darshan to 63 Nayanmarsவள்ளி தெய்வானை சமேதசிங்கார வேலவர்அறுபத்து மூவருக்கு சேவை

Amba Karpagavalli giving darshan to 63 Nayanmars (close up)
கற்பகாம்பாள்அறுபத்து மூவருக்கு அருட்காட்சி தரும்
விரைமலர்க் குழல் வல்லிமறைமலர்ப் பத வல்லிவிமலி கற்பகவல்லிKapaleeswarar in Silver Vimanam giving darshan to 63 Nayanmars

வெள்ளி விமானத்தில் அறுபத்து மூவருக்கும்அருட்காட்சி தரும் கபாலீஸ்வரர்அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகர், ஐந்தொழிலால் அகிலமணைத்தையும் ஆட்டுவிக்கும் ஐயம்
திருமயிலை கபாலீஸ்வரர் திருபுவன சக்ரவர்த்தியாக செங்கோல் தாங்கி பவனி வரும் அழகே அழகு.

The Great evening spectacle of Arupathu Moovar fetival.
(The temple tower of Velliswarar temple)

அறுபத்து மூவர் இரம்மியமான
மாலை தரிசனம்
(வெள்ளீஸ்வரர் விமானம்)

அறுபத்து மூவரில் நால்வர்(9 )அறுபத்து மூவரில் நால்வர்(8 )

அறுபத்து மூவரில் நால்வர்(7 )
அறுபத்து மூவரில் நால்வர்(6 )

அறுபத்து மூவரில் நால்வர்(5 )


அறுபத்து மூவரில் நால்வர்(4 )

அறுபத்து மூவரில் நால்வர்(3 )
அறுபத்து மூவரில் நால்வர்(2)
அறுபத்து மூவரில் நால்வர்(1 )Thirugnana Sambabdar who turned ashes into a lady.
பதிகம் பாடி என்பைப் பெண்ணாக்கியஆளுடையப் பிள்ளைதிருஞான சம்பந்தர்

பூம்பாவையின் தந்தை சிவநேசர்


Sivanesar father of Angam Poompavai

என்பாயிருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை
Angam Poompavai

The lady who came out of Ashes by the Lord's Grace


Sri Ganesha leading the Arupathu Moovar
அறுபத்து மூவர் திருவிழாவில் முதலில்

முழுமுதற் கடவுள் விநாயகர்

நாளைய உற்சவம்:(ஒன்பதாம் நாள்)

திருமயிலை:காலை : பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா.மாலை: 6 மணியளவில் இறைவன் இரவலர் கோல(பிக்ஷாடணர்) விழா .


இரவு. பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா.திருவான்மியூர்:


மதியம்: அருள்மிகு கல்யாண சுந்த்ரர் திருக்கலயாணம். விமானக்காட்சிஇரவு: அகத்தியருக்கு திருமணக் காட்சி, வன்னிமரக் காட்சி, அருள்மிகு தியாகராஜர் விதி உலா.

வேங்கீஸ்வரம்:

காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி.
மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் பவனி .


திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
தண்ணார் அரக்கன் தோள் சாய்த்துகந்த தாளினான்


கண்ணார் மயிஅலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்


பண்ணார் பதினெண் கணங்கள் தம் அட்டமி நாள்


கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்!திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்


நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயதவனே


செறிவார் மாமதில்சூழ் திருவான்மியூர் உறையும்


அறிவே உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.


*******