Tuesday, June 5, 2007

THIRU MYLAI KAPALEESWARAM - 4

Till now you witnessed the great spectacle of the year 2007's festival. Please visit in future to read about the history of this temple and also the photos of yester years festivals.
இதுவரை 2007 வருடத்திய திருக்கோலத்தை தரிசனம் செய்தீர்கள், இத்தலத்தின் வரலாறு, மற்றும் மற்ற ஆண்டுகளின் தரிசனம் இனி வரும் இடுகைகளில் அவசியம் மறுபடியும் வந்து கண்டு களியுங்கள்.
THE ARUPATHU MOOVAR FESTIVAL OF MYLAPORE
8th day evening of 10 day festival
Mundaka Kanni Amman
மயிலையிலே கோவில் கொண்ட
கோல விழி அம்மன்

Thraupathy Amman
திரௌபதி அம்மன்

Chinthathripet Murugar
சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து மயிலை வந்த
முத்துக்குமரன்



Thiruvalluvar with Vasuki

உலகப் பொது மறை திருக்குறள் அருளிய
திருவள்ளுவரும் வாசுகியும்



Singaravelavar in Vimanam giving darshan to 63 Nayanmars

வள்ளி தெய்வானை சமேத
சிங்கார வேலவர்
அறுபத்து மூவருக்கு சேவை

Amba Karpagavalli giving darshan to 63 Nayanmars (close up)

கற்பகாம்பாள்


அறுபத்து மூவருக்கு அருட்காட்சி தரும்

விரைமலர்க் குழல் வல்லி
மறைமலர்ப் பத வல்லி
விமலி கற்பகவல்லி





Kapaleeswarar in Silver Vimanam giving darshan to 63 Nayanmars

வெள்ளி விமானத்தில் அறுபத்து மூவருக்கும்
அருட்காட்சி தரும் கபாலீஸ்வரர்



The Great evening spectacle of Arupathu Moovar fetival.

(The temple tower of Velliswarar temple)



அறுபத்து மூவர் இரம்மியமான
மாலை தரிசனம்
(வெள்ளீஸ்வரர் விமானம்)



அறுபத்து மூவரில் நால்வர்(9 )


அறுபத்து மூவரில் நால்வர்(8 )
href="http://bp0.blogger.com/_ADwJgwfepSw/Rm4kVruOonI/AAAAAAAAANg/bXQAE8VR08M/s1600-h/mylai37.JPG">

அறுபத்து மூவரில் நால்வர்(7 )

href="http://bp1.blogger.com/_ADwJgwfepSw/Rm4jn7uOolI/AAAAAAAAANQ/w21pThpp_-E/s1600-h/mylai35.JPG">
அறுபத்து மூவரில் நால்வர்(6 )

அறுபத்து மூவரில் நால்வர்(5 )


அறுபத்து மூவரில் நால்வர்(4 )

அறுபத்து மூவரில் நால்வர்(3 )



அறுபத்து மூவரில் நால்வர்(2)


அறுபத்து மூவரில் நால்வர்(1 )
Thirugnana Sambabdar who turned ashes into a lady.

பதிகம் பாடி என்பைப் பெண்ணாக்கிய
ஆளுடையப் பிள்ளை
திருஞான சம்பந்தர்


பூம்பாவையின் தந்தை சிவநேசர்
Sivanesar father of Angam Poompavai

என்பாயிருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை
Angam Poompavai
The lady who came out of Ashes by the Lord's Grace



Sri Ganesha leading the Arupathu Moovar
அறுபத்து மூவர் திருவிழாவில் முதலில்
முழுமுதற் கடவுள் விநாயகர்

One of the legends of this great temple is the miracle done by ThirugnanaSambandar who turned ashes into a lady by singing in praise of Lord Shiva at Kapaleeswaram. To commemerate this every year this festival is celebrated. You are witnessinf that great festival in this post. The legend is will be explained in future post.

எட்டாம் நாள் மாலை பிரதோஷ காலத்தில் பஞ்ச மூர்த்திகள் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு அருட்காட்சி தருகின்றனர். பங்குனிப் பெரு விழாவின் சிகரமான இந்த "அறுபத்து மூவர் விழாவின் " அற்புத காட்சிகள் இந்த இடுகையில்.
அரவம் தீண்டி மாண்டு என்பான பூம்பாவையை அம்மையின் ஞானப் பாலுண்ட ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் ஆண்டவன் மேல் பதிகம் பாடி உயிருடன் எழுப்பிய அந்த அற்புதத்தை போற்றும் வகையில் பூம்பாவை, சிவநேச செட்டியார், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலியோர் பல்லக்கிலும், மற்ற நாயன்மார்கள் நால்வர் நால்வராக பவளக் கால் விமானத்திலும் பஞ்ச மூர்த்திகளை எதிர் கொண்டு , வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும், கற்பகாம்பாள், சிங்கார வேலவர், சண்டிகேஸ்வரர் மற்ற விமானங்களில் பவனி வர, மயிலையின் மற்ற தெய்வங்களான அங்காள பரமேஸ்வரி, திரௌபதி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன், திருவள்ளுவர் வாசுகியுடன், சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து முத்துக்குமரன் என்று மாடவீதிகள் முழுவதும் மக்கள் வெள்ளமாக கூட்டம் கூடியிருக்க, அன்பர்கள் தண்ணீர்,நீர் மோர், பிரசாதம் என்று வழங்க எம்பெருமான் பவனி வரும் அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. முடிந்த வரை புகைப்படங்களின் மூலம் அந்த அற்புத அழகை அன்பர்களிடம் சேர்பிக்கும் முயற்சியே இந்த இடுகை.

Monday, June 4, 2007

THIRU MYLAI KAPALEESWARAM - 3

7th day Morning Therottam(chariots)
The seventh day of the festival is the chariot festival in almost all the temples. So also in Mylapore. You can witness the majestic fully decorated . bedecked chariots being taken in procession among the mada streets of Mylapore in this post.
Sandikeshwarar chariot
சண்டிகேஸ்வரர் இரதம்
Singaravelavar Ther
சிங்கார வேலவர் திருத்தேர்

Karpagambal
திருத்தேரில் தரிசனம் தரும் கற்பகாம்பாள்
முன்னழகும் பின்னழகும்


Karpagambal Chariot
கற்பகாம்பாள் திருத்தேர்


Kapaleeswarar chariot (Front view)
கபாலீஸ்வரர் திருத்தேர் முன்னழகு


Kapaleeswarar chariot (Side view)
கபாலீஸ்வரர் திருத்தேர்( பக்கவாட்டு தோற்றம்)


VINAYAKAR CHARIOT
விநாயகர் திருத்தேர்


ஏழாம் நாள் உற்சவம் தேரோட்டம். பஞ்ச மூர்த்திகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பவனி வரும் அழகை கணடு களியுங்கள்.

Saturday, June 2, 2007

THIRU MYLAI KAPALEESWARAM -2

The photos of today are the of the 5th Day Morning photos. Pancha Murthis(Five Lords) give darshan in Vimanams.
இந்த இடுகையில் ஐந்தாம் நாள் காலை உற்சவ கோலங்கள். பஞ்ச மூர்த்திகள் சவுடல் விமானத்தில் அருட்காட்சி தருகின்றனர்.
SINGARAVELAVAR ON VIMANAM
விமானத்தில் சிங்கார வேலவர்
KARPAGAMBAL CLOSE UP
அம்மை கற்பகவல்லி



KAPALEESWARAR BACK SIDE

கபாலீஸ்வரரின் பின்னழகு
கபாலீஸ்வரர் சவுடல் விமான சேவை



KAPALEESWARAR ON SAUDAL VIMANAM (Closeup)






Friday, June 1, 2007

THIRU MYLAI KAPALEESWARAM -1

In Tamilnadu Shaivaite temples the concept of Pancha Murthis( Five Lords) is followed. They are 1. Lord Vinayaka, 2. Lord Shiva as Somasknada( Shiva, Parvati and Murugarin between) 3. Goddess Parvati, 4. Lord Muruga along with His concerts Valli and Devayanai 5. Sandikeswara .
You witnessed the great specatacle of the procession of Lord Kapaleeswara on 3rd day morning of the 10 day festival popularly called as ADIKARA NANDI SEVAI.
Popular Tamil composer Papanasam Shivan sang about this Adikara Nandi sevai as
"You will need one crores of eyes to witness the great procession of Lord Kapaleeswara."
5. SANDIKESWARA ON SILVER RISHABAM
வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

4. LORD SINGARA VELAVAR WITH VALLI AND DEIVANAI(Close up)
வள்ளி தேவசேனா சமேத சிங்கார வேலவர்


Lord Singaravelavr on Gandahrvan (celestial)Mount
கந்தருவன் வாகனத்தில் சிங்கார வேலவர்


3.Goddess Karpagavalli on Gandaharvi (celestial) Mount
கந்தருவி வாகனத்தில் கற்பகாம்பாள்


Goddess Karpagambal ( Close up)
அம்மை கற்பகவல்லி


2.Lord Kapaleeswara on Adikara Nandi Mount (Front view)
"காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி"
என்று பாபநாசம் சிவன் பாடிய
கபாலீஸ்வரரின் அதிகார நந்தி சேவை
Lord Shiva on Adikara Nandi Mount ( Back view)
அதிகார நந்தி சேவை பின்னழகு

Lord Kapaleeswara on Adikara Nandi Mount (Close up )
கபாலீஸ்வரர் அதிகார நந்தி சேவை

Vinayaka on Silver Mooshika vahanam 3rd Day morning
வெள்ளி மூஷிக வாகனத்தில் வினாயகர்

Popularly called as MYLAPORE, ThiruMyalai is one of the greatest Shaivaite temple ( Temple of Lord Shiva). There are many legends associated with this temple.


1. Goddess Parvati woeshipped Shiva in the form of peacock, so this place is called Mylapore(Mayil in Tamil means peacock).

2. Gnanasambandar brought back Poombavai to life from bones and ashes by singing song on Lord Shiva.

3. A grand festival is conducted every year to commemerate this popularly called as Arupathu Moovar Thiruvizha , is a festival to honour the 63 ardent devotees of Shiva.


This blog is the photos taken during that festival and other rituals of this great temple. Please view the grandly decorted , bejwelled Lord and Goddess ( Pancha Murtis) taken in procession daily in the morning and evening on different vahanama (mounts). These photos are is of the 2007's older photos will be uploaded later.



" கயிலையே மயிலை , மயிலையே கயிலை"

என்று அழைக்கப்படும் திருமயிலை திருத்தலம் தொண்டை மண்டலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலம். அம்மை பார்வதி மயிலுருவாய் புன்னை வனத்தில் சிவலிங்க பூஜை செய்து, பூஜையின் மகத்துவத்தை உணர்த்திய தலம். அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை திருஞான சம்பந்தர் என்பை பெண்ணாக்கிய தலம்.

வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் தலம். இத்தலத்தின் அறுபத்து மூவர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தலத்தின் சிறப்பையும், அந்த பங்குனிப் பெருவிழாவின் போது " காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி " என்று பாபநாசம் சிவன் பாடிய திருமயிலை கபாலீச்சுரத்தின் பஞ்ச மூர்த்திகளின் அலங்கார பவனியையும், மற்ற திருவிழாக்களின் புகைப்படங்களின் தொகுப்பே இந்த இணையத் தலம். ஐயனின் தரிசனம் கண்டு அருள் பெற வேண்டுகிறேன்.